என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் நீதிமன்றம்"
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (75). இவர் மீது 2014-ம் ஆண்டு தேசதுரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்தநிலையில் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். ஒருவிதமான அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே அவர் பாகிஸ்தான் திரும்பாமல் துபாயிலேயே தங்கியுள்ளார். இதற்கிடையே அவர் மீதான தேசதுரோக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
கடந்த 1-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஆசிப் சயித் கோசா தலைமையிலான பெஞ்ச் முஷரப்புக்கு எச்சரிக்கை விடுத்தது.
அவர் கோர்ட்டில் ஆஜராகாவிட்டால் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் தகுதியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
எனவே அவர் வருகிற மே 1-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார். 2-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தை பதிவு செய்கிறார்.
இந்த தகவலை முஷரப்பின் வக்கீல் சல்மான் சப்தார் நிருபர்களிடம் தெரிவித்தார். முஷரப் தனது டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். #PervezMusharraf
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.
இதற்கிடையில், நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன.
இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. பிலாக்ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.
அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் நவாஸ் செரீபுக்கு எதிராக பலமான ஆதாரங்கள் உள்ளதால் இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #FormerPakistanPM #NawazSharif #Nawazimprisonment #AlAziziacase
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர் பானிகாலா பகுதியில் ராவல் ஏரி உள்ளது. அதை ஆக்கிரமித்து வசதி படைத்தவர்கள் ஆடம்பர மாளிகைகள் கட்டியுள்ளனர்.
இதனால் ராவல் ஏரி மாசு அடைந்துள்ளது. எனவே பானிகாலா பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மாளிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதில் விசேஷம் என்னவென்றால் இப்பகுதியில் பிரதமர் இம்ரான்கானின் 5 படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர மாளிகையும் உள்ளது. அது சரிவர திட்டமிடாமலும், ஆக்கிரமித்தும் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சாகிப் நிஷார் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கான் வீடு மீது தலைநகர் வளர்ச்சி ஆணையம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமித்து கட்டிய குற்றத்துக்காக இம்ரான்கான் உரிய அபராத தொகையை செலுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மற்ற வீடுகள் மீது நடவடிக்கையை தொடங்க வேண்டும் என தலைமை நீதிபதிகள் நிஷார் உத்தரவிட்டார். அதற்கு பதில் அளித்த இம்ரான் கான் வக்கீல் பாபர் அவான் தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் ஒத்துழைப்பார் என உறுதி அளித்தார். #Imrankhan
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் (74). இவர் 1999 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
இவர் பதவியில் இருந்த போது 2007-ம் ஆண்டு அவரை நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பலரை வீட்டு காவலில் வைத்தார். 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தார்.
தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சிறப்பு கோர்ட்டில் அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் ஆஜராக முஷரப்புக்கு பல தடவை சம்மன் அனுப்பப்பட்டது. தற்போது துபாயில் தங்கியிருக்கிறார். அதனால் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
அதை தொடர்ந்து முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டையை முடக்கி வைக்க பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அதனால் அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள முடியாது. வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கவோ, விற்கவோ முடியாது.
ஏற்கனவே இந்த வழக்கில் முஷரப்பை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை நாடும்படி உள்துறை அமைச்சகத்துக்கு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முஷரப்பிற்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. #PervezMusharraf
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்